கத்து குத்து ராதிபு போன்றது...

நாள் 24            ஆகஸ்டு 02,  2013     
                                                                                                                                                            இந்தோனேசிய மறைவான கலை ஆவணங்கள்

நீங்கள் எப்பொழுதாவது மக்கள் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளாமல் நெருப்புத் தழலின் மேல் நடப்பதையும், கத்தியாலும் கூரான ஆணிகளாலும் தங்களை அறுத்துக் கொள்வதையும் பார்த்திருக்கிறீர்களா ? இதுதான்டெபஸ்என்பது. இது ஒரு கலை. அதே சமயத்தில் இது ஒரு யுத்தக்கலையும், சக்தியை வெளிப்படுத்தும் ஒன்றுமாகும். ‘டெபஸ்சடங்குகள் சில வேளைகளில் திருமணங்களிலும் சில மத வழிபாடுகளிலும் அநுசரிக்கப்பட்டு வருகிறது. கடவுள் இப்படிப்பட்ட வல்லமையை சுத்தமுள்ளவர்களுக்கே தருவார் என்று நம்பப்படுகிறது. மேலும் இது பாண்டன் இந்தோனேஷியா மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாக இருக்கிறது. பாண்டன் மக்கள் மத்தியில் இந்தக் கலையின் அனுபவம் பெறாத ஒருவரும் இல்லை.

இப்பெயரில்என்ன இருககிறது?

பாண்டன் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இந்தோனேஷியாவில் 2000ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மிக இளைய பிராந்தியத்தின் பெயர் இது. இங்கு 90 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்(ஜாவா தீவின் மேற்கு முனையில்). பாண்டன் என்பது 1526ம் ஆண்டுகளிலே இஸ்லாமிய போராளிகள் மந்திர வல்லமை கொண்ட டெமாக்கின் ஜவனிய சுல்தானியின் நினைவாக இந்த பெயர் நிலைநாட்டப்பட்டது. பாண்டன் என்ற பெயர், இந்தோனேஷியாவின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றைக் குறிக்கும். இது ஜகர்த்தா புகழ் பெறுவதற்கு முன் வாசனை திரவியங்களின் வியாபாரத்திற்கு பெயர் போன துறைமுகமாகும். பழைய பாண்டனில் துறைமுகத்தின் பாழடைந்த பகுதிகளையும், அரண்மனைகளையும், கலங்கரை விளக்கம் போல் தோற்றமளிக்கும் பழைய பாண்டன் மசூதியின் கோபுரத்தையும் பார்க்கலாம். பாண்டன் என்பது பாண்டன் பிராந்தியத்தில் உள்ள மக்கள் கூட்டத்தின் பெயருமாகும். இவர்கள் இன்னும்  ஈஸா அல் மஸீஹ்வுக்காக ஆதாயப்படுத்தப்படவில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திர பழக்கங்களல்லாமல் பாண்டன் இஸ்லாமிய மதவெறிக்கு பெயர் போன இடமாகும். மதவெறி குழுக்களில் முக்கியமானவர்கள் பாண்டன் மத பள்ளிகளிலிருந்து வந்தவர்கள். பாண்டனில் வெகு தொலைவில் உள்ள இடங்களில் சில ஈஸா முஸ்லீம்கள் வசிக்கின்றனர். பாண்டன் பிராந்தியத்திற் குட்பட்ட, அதே சமயத்தில் ஜகர்த்தாவின் மாநகர எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். சில திருச்சபைகளும், விசுவாசிகளும் மட்டுமே பாண்டன் மக்களை சந்திப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். சமீப நாட்களில் இது சற்று அதிகரித்து இருக்கிறது. ஆனால் கல்வி மற்றும் சமுதாய முன்னேற்றப் பணி மூலமாக பலன் தரக்கூடிய பல திறந்த வாசல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

துஆ செய்யவேண்டிய காரியங்கள்

•          பாண்டன் மக்கள் மந்திரம் மற்றும் மதவெறி அடிமைத் தனங்களிலிருந்து விடுபட்டு சுவிசேஷத்திற்கு திறந்த மனதுடையவர்களாய் மாற துஆ செய்வோம். (யோ. 8.32, “சத்தியத்தை நீங்கள் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”).

•          இந்தோனேஷிய விசுவாசிகள் அன்புடன் முஸ்லீம்கள் மேல் அக்கறை கொண்டு, அவர்களது சரீர மற்றும் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க முன்வர துஆ செய்வோம்.

•          பாண்டன் மக்கள் மத்தியிலேயே வாழ்ந்து, சேவை செய்து சாட்சி சொல்லும் ஈஸா முஸ்லீம்களை இறைவன் எழுப்ப வேண்டும் என்று துஆ செய்வோம். (லூக்கா:10:2,“அறுவடை மிகுதி, ஆட்களோ குறைவு. அறுவடைக்கு எஜமான் தமது அறுவடைக்கு ஆட்களை அனுப்ப வேண்டிக் கொள்ளுங்கள்”).



Comments

Popular posts from this blog

சூழ்ச்சி செய்வதில் சிறந்தவன் யார்?

‘ஷரீஆ’ சட்டம் என்றால் என்ன?

ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியுமா?